verado-lite

நாங்கள் யார்

ஈரோடு நகரின் மதிப்புமிக்க வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் தலைமுறை தலைமுறையாக நூறு ஆண்டுகளுக்கும் மேலே பலப்பல வணிகங்களில் ஈடுபட்டிருக்கிறோம்.

ஈரோடு நகரின் மதிப்புமிக்க வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் தலைமுறை தலைமுறையாக நூறு ஆண்டுகளுக்கும் மேலே பலப்பல வணிகங்களில் ஈடுபட்டிருக்கிறோம். மஞ்சள் வணிகமும் தோல் தொழிலும் எங்கள் பாரம்பரிய தொழில்கள்.

 

நமது AOK Tannery தோல் பதனிடும் தொழிற்சாலை 1945ல் பாட்டனாரால் நிறுவப்பட்டது. அந்த நமது அதே பெயரில் உருவாக்கப்பட்டது தான் AOK நகர். நமது கெமிக்கல் கம்பெனியும் அங்கே தான் அமைந்துள்ளது. AOK குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையான நாங்கள் அரிசி மண்டி, மசாலா நிறுவனம், வெப் டிசைனிங் என்று பல துறைகளில் கால் பதித்த பின் கெமிக்கல் துறையிலும் வெற்றிகரமாக இயங்கி வருகிறோம்.

 

ஆஸ்க் ஜான்ஸி மற்றும் சாணக்கியன் யூட்யூப் சேனல் மூலமாகக் கிடைத்த நற்பெயருடன் பலவிதமான கெமிக்கல்ஸ் மற்றும் க்ளீனிங் பொருட்களை மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்து வருகிறோம். தமிழகத்திலேயே முதன்முறையாக ஒரு கிலோ பேக்கிங்கில் கூட கெமிக்கல்களை ரெகுலர் லாரி சர்வீஸ் மூலம் எல்லா ஊர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அத்துடன் 4 கிலோ அளவுகளில் ரெடிமிக்ஸ் ஆக கான்சண்ட்ரேட்டட்  பொருட்களை மிகக் குறைவான முதலீட்டில் சிறுதொழில் செய்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் பொருட்டு தயாரித்து வினியோகிக்கிறோம்.

 

நமது தொலைநோக்கு பார்வை

 

மூலிகைப் பொருட்கள் மற்றும் அழகுசாதனத் துறைகளிலும் கால் பதிக்க வேண்டுமென்பது நமது எதிர்காலத் திட்டம். அடுத்த மூன்று வருடங்களில் ஆஸ்க் ஜான்ஸி பிராண்டு பெயரில் 50+ பொருட்கள் உயர்ந்த தரத்தில் தயாரித்து விநியோகிக்க உள்ளோம். அதே சமயம் சொந்த பெயரில் சந்தைப்படுத்த விரும்பும் சிறுதொழில் வணிகர்கள் நம்மிடம் கெமிக்கல்கள் மற்றும் ரெடிமிக்ஸ் கான்சண்ட்ரேட்டும் தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.

 

இந்தியா முழுவதும் ஆஸ்க் ஜான்ஸி ரீடெயில் அவுட்லெட் மூலம் 5000+ பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர வேண்டுமென்பது நமது லட்சியம். தற்சமயம் இந்தியா முழுக்க வினியோகம் செய்யும் ஒரு கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சிறப்பாக செயல்படும் வினியோகஸ்தர்களுக்கு வருங்காலத்தில் நமக்கான மூலிகை மற்றும் அழகுசாதன பொருட்களை ஜாப் ஒர்க் அடிப்படையில் தயாரித்துத் தரும் வாய்ப்பை வழங்கி அப்பொருட்களையும் இதே கட்டமைப்பு மூலம் வினியோகிக்க எண்ணியுள்ளோம்.

 

ஆயிரமாயிரம் பிராண்டுகள் மார்க்கெட்டில் இருந்தால் என்ன… உயர்வான தரமும் குறைவான விலையும் மட்டுமே எங்கள் தாரக மந்திரம்

 

 

ASK Jhansi Home Care Products

);