Read Before You Order

1. 1000 ருபாய்க்கும் குறைவாக ஏன் ஆர்டர் போட முடியவில்லை ?

இது சிறுதொழில் செய்பவர்களுக்கான இந்தியாவின் முதல் ஆன்லைன் கெமிக்கல் ஷாப். மிகவும் குறைவான மார்ஜினே வைத்திருக்கிறோம். அதனால் பேக்கிங் செய்யும் அட்டைப்பெட்டியின் செலவு, லாரி ஆஃபீஸ் வரையிலான ட்ரான்ஸ்போர்ட் கட்டணம் ஆகியவை குறைந்த பட்சமாக நீங்கள் 1000 ருபாய்க்காகவாவது ஆர்டர் போட்டால் தான் எங்களுக்கு கட்டுப்படி ஆகும். எனினும் நேரில் எமது அலுவலகத்தில் வந்து வாங்கினால் ஒரு கிலோ மட்டும் கூட வாங்கிச் செல்ல முடியும்.

2. ஆர்டர் செய்த கெமிக்கல்ஸ் எப்போது வரும் ?

நீங்கள் ஆர்டர் செய்த தேதியை கணக்கில் கொள்ள மாட்டோம். பணம் கட்டிய தேதியை தான் கணக்கில் கொள்வோம். பணம் செலுத்தியதும் ரசீதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து 790 456 9575 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி விட வேண்டும். பணம் செலுத்திய தேதியில் இருந்து சுமார் மூன்று அல்லது நான்கு வேலை நாட்களுக்குள் டெஸ்பாட்ச் செய்து விடுவோம். எனினும் ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு வாரத்துக்கும் மேல் தாமதம் ஏற்பட்டால் தொலைபேசியில் அழைத்து விவரம் சொல்வோம். அதன் பின் லாரியில் உங்கள் இடத்துக்கு வந்து சேர அதிகப்பட்சமாக மேற்கொண்டு ஒரு நாளோ அல்லது ஒரு வாரமோ ஆகலாம். அது அந்த லாரி சர்வீஸைப் பொறுத்தது.

3. கெமிக்கல்ஸ் கிடைக்க தாமதமானால் எந்த எண்ணுக்கு அழைப்பது ?

டெஸ்பாட்ச் செய்வதோடு எங்கள் பொறுப்பு முடிந்து விடும். உங்கள் My Account பகுதியில் My Orders போய் பார்த்தால் Completed என்று காண்பிக்கும். இந்நிலையில் லாரி பில்லை உங்கள் வாட்ஸ் ஆப்புக்கு அனுப்பி வைத்திருப்போம். லாரி ஆஃபீஸில் தொடர்பு கொண்டு விசாரித்துக் கொள்ளலாம்.

ஒரு வேளை ஆர்டர் போட்டு ஒரு வாரம் ஆகியும் எந்த தகவலும் வராவிட்டால் 0424-2292575 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் chanakiyan.jhansi@gmail.com  என்ற ஈமெயில் முகவரியில் மேல் முறையீடு செய்யலாம்.

4. நான் ஆர்டர் செய்துள்ளேன். எனக்கு போனே வரவில்லையே ?

நீங்கள் ஆர்டர் போட்டால் போன் எதுவும் வராது. உங்கள் ஆர்டர் ஸ்டேட்டஸை உங்கள் My Account பகுதியில் My Orders பகுதியில் போய் பார்த்துக் கொள்ளலாம். பணம் செலுத்தி ஓரிரு நாட்களில் On Hold என்று இருப்பது Processing என்று மாறி விடும். அப்படியென்றால் பில் போட்டாச்சு என்று அர்த்தம். பின் Completed என்று மாறி இருந்தால் சரக்கு டெஸ்பாட்ச் ஆகி விட்டது என்று அர்த்தம்.

5. நான் வாட்ஸ் ஆப்பில் பணம் கட்டிய ஸ்க்ரீன்ஷாட் அனுப்பினேன். யாரும் பார்க்கவில்லை அல்லது பதில் வர வில்லை. ஏன் ?

எங்கள் ஊழியர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் வாட்ஸ் ஆப் செக் செய்வதற்காக ஒதுக்கி உள்ளார்கள். அந்த நேரம் வரும் வரை தயவு செய்து காத்திருக்கவும். பல பேர் தேவையில்லாத வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்புவதால் இந்த பணி சில நேரம் தாமதமாகிறது.

6. யாரும் தொலைபேசியை எடுக்க மாட்டேங்கிறார்கள். எப்படி தொடர்பு கொள்வது ?

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை லன்ச் டைம் தவிர்த்து மற்ற நேரங்களில் நிச்சயமாக தொலைபேசி அழைப்புக்கு பதில் வரும். எனினும் தினமும் தொழில் உதவி கேட்டும், வீடியோ சந்தேகங்கள் கேட்டும் நூற்றுக் கணக்கான தொல்லை தரும் கால்கள் வருகின்றன. இதனால் முக்கியமான பிசினெஸ் கால்களை அட்டெண்ட் செய்வதில் சிரமம் ஏற்படுகின்றன. தயவுசெய்து பிசினெஸ் தவிர்த்த மற்ற கால்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் ஆர்டர் போட்டிருந்தாலும் கால் செய்ய வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு எல்லாவற்றையும் நாங்கள் ஆட்டோமேட் செய்திருக்கிறோம்.

7. ஏன் கெமிக்கல்ஸை டோர் டெலிவரி செய்வதில்லை ?

கெமிக்கல்ஸுக்கு நாங்கள் வைத்திருக்கும் குறைவான மார்ஜின் தான் முக்கிய காரணம். இந்த விலைக்கு டோர் டெலிவரி செய்வது சாத்தியமில்லை. டோர் டெலிவரி என்றால் கூரியரில் அனுப்ப வேண்டும். கூரியர் சார்ஜ் ஒரு கிலோவுக்கு சுமார் 100 ருபாய். சுண்டக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்பதைப் போல. நாங்கள் விற்பனைச் செய்யும் அதே கெமிக்கல் டோர் டெலிவரி செய்யும் அமேசானில் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று பார்த்தால் உங்களுக்கே வித்தியாசம் புரியும்.

8. ஏன் கெமிக்கல்ஸை டீலர்கள் மூலம் சப்ளை செய்வதில்லை ?

ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸின் டீலர்களுக்கும் கெமிக்கல் விற்பனைக்கும் சம்பந்தம் இல்லை. இரண்டும் இரண்டு வேறு கிளைகள். தவிர ஹோம்கேர் ப்ராடக்ஸ் நுகர்வோருக்கானது. கெமிக்கல்ஸ் சிறு தொழில் செய்பவர்களுக்கானது. பல டீலர்கள் தம் வீட்டில் தான் ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஸ்டாக் வைக்கிறார்கள். கெமிக்கல்களை வீட்டில் ஸ்டாக் வைப்பது சட்டப்படி கூடாது. அது ஆபத்தான விஷயம். அதே போல நாங்கள் மொத்தமாக 50 வகைக்கும் மேற்பட்ட கெமிக்கல்ஸ் பல்வேறு அளவுகளில் வைத்திருக்கிறோம். டீலர்கள் எதை வாங்கி ஸ்டாக் வைக்க முடியும் ? அவர்கள் அதற்காக எவ்வளவு பணம் முதலீடு செய்ய முடியும் ?

9. ஏன் என் ஆர்டர் கேன்சல் ஆகி விட்டது ?

ஆர்டர் போட்டு விட்டு மூன்று நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் ஆர்டர் கேன்சல் ஆகி விடும். அதன் பின் மீண்டும் ஆர்டர் போட வேண்டும். கெமிக்கல் விலைகள் தினப்படி மார்க்கெட் விலைக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். விலை ஏறினால் ஏற்றி விடுவோம். இறங்கினால் இறக்கி விடுவோம். ஆகையால் ஆர்டர் போட்டு விட்டு பணம் செலுத்தாமல் தாமதிப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. அதே போல நீங்கள் ஆர்டர் போட்டு பணம் கட்டாமல் இருக்கும் பொருள் அவுட் ஆஃப் ஸ்டாக் என்றாலும் ஆர்டரை கேன்சல் செய்து விடுவோம். ஆதலால் நீங்கள் எப்போது பணம் செலுத்தப் போகிறீர்களோ அப்போது மட்டுமே ஆர்டர் போடுங்கள்.

10. ஜி எஸ் டி இல்லாமல் கெமிக்கல்ஸ் கிடைக்காதா ?

கண்டிப்பாக கிடைக்காது. நாங்கள் எங்கள் கணக்கு வழக்குகளை மிகவும் நேர்மையாக வைத்திருக்கிறோம். நூறு சதவீதம் ஜி எஸ் டி செலுத்துகிறோம். அதனால் வரி இல்லாமல் அனுப்ப இயலாது. ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸுக்கு வரி அடக்கமான விலை குறிப்பிட்டுள்ளதால் தனியாக வரி வசூலிப்பதில்லை. ஆனால் கெமிக்கல்ஸில் விலையையும் ஜி எஸ் டியையும் தனித்தனியாக பிரித்துக் கொடுத்துள்ளோம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். 

11. நேரில் வந்து வாங்கினால் தள்ளுபடி கிடைக்குமா ?

கிடைக்காது. எப்படி வாங்கினாலும் ஒரே விலை தான். எனினும் நேரில் வந்து வாங்கும் போது குறைந்த பட்சமாக 1000 ருபாய் என்ற விதி பொருந்தாது. நூறு ருபாய்க்கு கூட நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

12. நான் வாங்க நினைக்கும் கெமிக்கல் உங்களிடம் இல்லையே ?

நீங்கள் என்ன கெமிக்கல் வாங்க நினைக்கிறீர்கள் என்று chanakiyan.jhansi@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். வருங்காலத்தில் அதை லிஸ்டிங் செய்ய முயற்சி செய்வோம்.

13. நான் தொலைபேசியில் ஆஸ்க் ஜான்சி மேடமை தொடர்பு கொள்ள முடியுமா ?

நிறைய பேர் அவர்களிடம் பேசுவதற்காக கால் செய்கிறார்கள். தயவுசெய்து அவர்களிடம் கேட்க நினைக்கும் சந்தேகங்களை யூட்யூப் வீடியோவில் கமெண்ட் பகுதியில் கேட்கவும். நீங்கள் கால் செய்வது பல ஊழியர்கள் இருக்கும் அலுவலகம். வீட்டிலிருந்தே இந்த தொழிலை ஆஸ்க் ஜான்சி மேடம் இயக்குகிறார்கள். அவர்கள் அலுவலகத்துக்கு வருவதில்லை. அதனால் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாது.