verado-lite

கலைஞனுக்கோர் காவியாஞ்சலி

தமிழ்த்தலைவா... காப்பியமுரைத்துக் குறளோவியந்தீட்டிப் புனைவுகளாக்கி மொழித்தேனில் முக்கியெடுத்த கனிச்சுவைக் கரும்பைக் கணுவின்றிக் கவிச்சுவையில் நனைத்து அமிழ்து படைத்து ஆரியம் வென்ற

கலைஞனுக்கோர் காவியாஞ்சலி

தமிழ்த்தலைவா… காப்பியமுரைத்துக்
குறளோவியந்தீட்டிப் புனைவுகளாக்கி

மொழித்தேனில் முக்கியெடுத்த
கனிச்சுவைக் கரும்பைக்
கணுவின்றிக் கவிச்சுவையில் நனைத்து
அமிழ்து படைத்து ஆரியம் வென்ற
அன்புத்தலைவா…

எழுபிறவியை ஒரு பிறவியில் வாழ்ந்து
மீள்பிறவியெடுத்தே மீண்டு வந்தாயும்
போயப் பிழைதரும் பித்தர்களின் சொற்களைப்
பொய்யாக்கிப் பொய்யாக்கியே எழுந்து நின்றாய்…

மலர்ந்திருக்கும் மலரைத் தீண்டிப் பார்க்கும்
மதிமயக்கும் மாலைத் தென்றலைப் போல்
மனதிருக்குமுன் ஆற்றல் முன் மரணமும்
தொட்டுச் சென்று தொட்டுச் சென்று
வெட்கியதே… நாணியதே…
ஈற்றிலுன்னை அரவணைத்தே இறப்புமின்று
இறவாப் புகழ் பெற்றதே…

நும் தமிழென்னும் வீரமித் தரணியிலே வீழுமோ,
தமிழூறிக் கிடக்குமுன்நா ஓயுமோ…
விரலசைத்து எழுத்தசைசீர் தந்த
பனுவல்மசி காயுமோ…
தளையடியாய் நிரைநேராய்
தொடைதட்டித் தோள்புடைத்த
மொழிமரபு மறக்குமோ…
தமிழ்க்காதல் தீருமோ…

வஞ்சப்புகழ்ச்சியணியை வெற்றி கொண்டது
உம் பின் திரண்டிருக்கும் மக்களணி…
இடமில்லை கடலோரம் இடமில்லையென
தற்குறிப்பேற்றிய அணியை
நீதி வென்று நிலம் வென்று
பின்வருநிலை அணி செய்தது…

எடுத்துக்காட்டு உவமையணியாய்
அலைகடலெனத் திரண்ட பேரணி…
சொல்லேர்புலவனென உழுது
அறுவடை செய்யும் உவமையில்லா
உருவக அணியல்லவா நீ…

வெண்பாவை கலிப்பாவைத் தந்த
ஆசிரியப்பா உன்னை வஞ்சிப்பா ரென
சூழ்ந்திருந்தும் இடம் வெல்ல
இப்பால் ஈற்றிலோர் முறை
அப்பாவென அழைக்கநும் மைந்தன் அனுமதி கேட்டால்
அது தப்பா… யப்பா… யப்பப்பா…
எம் கண்களில் குளமப்பா…

வந்தார் போனார் வாசலில் நின்றாரென
அத்தனைக்கும் அடைக்கலம் தந்த
ஆலமரமே கட்டுமரமாயின்று
கரையொதுங்கியது ஐயகோ…

காவிரிக்காகப் போராடிக்
காவிரியும் போராடிக் கைவிரித்ததாலே
கடலோடு ஐக்கியமானாய் இனி நீர்
களங்களமில்லா அரசியலுக்கோர்
கலங்கரையும் ஆவாயோ…

எழுதியவர்: ASK Jhansi

related posts

ஆச்சு… நமக்குன்னு ரெண்டு குழந்தைகள் ஆயாச்சு… ஏதோ வாழ்ந்தோம் முடித்தோமென்ற நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் வாழ்ந்து முடித்து விடுகிறார்கள்… எழுத்தார்வம், ரசனைகள், கலைத்திறன், தொழில் ஆசைகள் அத்தனையும் மனதுக்குள் புதைக்கப்படுகிறது. அப்படியே வெளிப்பட்டாலும் அது காசு என்னும் பிரதான நோக்கத்தில் தான் வெளிப்படுகிறது… நமக்கென ஒரு ஆத்மதிருப்திக்காக இவற்றை செய்கிறோமா… அப்படி செய்ய சொல்லும் போது, “நேரமே இல்லைங்க…” என்ற பதில் தானே வருகிறது… ரசனைமிக்க பெண்கள் கூட டிவி சினிமாவில் காதலைப் பார்த்து அதிலேயே […]

Read more

மகன் ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு நானும் மச்சானும் (ஹஸ்) போயிருந்தோம்… பையன் க்ளாஸ்ல செகண்ட் ரேன்க்… போனதுமே அஞ்சு டீச்சர்ஸ் வரிசையா உட்கார்ந்திருந்தாங்க…, முதல்ல மேத்ஸ் மிஸ்… “மேத்ஸ்ல பையன் 96/100 வாங்கி இருக்கான். அடுத்த முறை செண்டம் வாங்கனும். 100க்கு ஒரு மார்க் கூட கம்மியா வாங்கிட கூடாதுன்னு சொல்லி இருக்கேன்…” என்றார்… மிச்சம் 4 மார்க்கை கேர்லெஸ் மிஸ்டேக்ல விட்டுட்டு வந்து மகன் புலம்பியது ஞாபகம் இருந்துச்சு எனக்கு… ஏன் செண்டமே தான் வாங்கணுமா… […]

Read more

ASK Jhansi Home Care Products

);