verado-lite

பப்ளிக் எக்ஸாம்னா இது தானா…

மகன் ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு நானும் மச்சானும் (ஹஸ்) போயிருந்தோம்... பையன் க்ளாஸ்ல செகண்ட் ரேன்க்... போனதுமே அஞ்சு டீச்சர்ஸ்

பப்ளிக் எக்ஸாம்னா இது தானா…

மகன் ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு நானும் மச்சானும் (ஹஸ்) போயிருந்தோம்… பையன் க்ளாஸ்ல செகண்ட் ரேன்க்…

போனதுமே அஞ்சு டீச்சர்ஸ் வரிசையா உட்கார்ந்திருந்தாங்க…,

முதல்ல மேத்ஸ் மிஸ்…

“மேத்ஸ்ல பையன் 96/100 வாங்கி இருக்கான். அடுத்த முறை செண்டம் வாங்கனும். 100க்கு ஒரு மார்க் கூட கம்மியா வாங்கிட கூடாதுன்னு சொல்லி இருக்கேன்…” என்றார்…

மிச்சம் 4 மார்க்கை கேர்லெஸ் மிஸ்டேக்ல விட்டுட்டு வந்து மகன் புலம்பியது ஞாபகம் இருந்துச்சு எனக்கு… ஏன் செண்டமே தான் வாங்கணுமா… நாலு மார்க் எட்டு மார்க் குறைஞ்சா என்னன்னு கொஞ்ச நேரம் நான் மிஸ்ஸுக்கு பாடம் நடத்திட்டு அடுத்த மிஸ் கிட்ட போனேன்…

அடுத்ததா பயாலஜி மிஸ்… நல்லா சிரித்த முகம்…

“இந்த மீட்டிங் மார்க் கம்மியா வாங்கிய பசங்களுக்கு மட்டும் தான்… உங்க மகன் செகண்ட் ரேன்க் வாங்கி இருக்கான்… க்ளாஸ்ல அவன் ஓவர் ஸ்மார்ட்… அதான் அவங்கம்மா எப்படி இருப்பாங்கன்னு பார்க்கணும்ங்கற ஆசையில் சும்மா உங்களை வரச் சொன்னேன்…”

என்று அவங்க சொன்னதும் மச்சானைப் பார்த்து பெருமையா ஒரு லுக் விட்டேன்… “அடப்பாவிகளா பையன் ஸ்மார்ட்னா அம்மாவை தான் பார்க்கணுமா, ஏன் அப்பா ஸ்மார்ட்டா இருக்கக் கூடாதா…” அவர் மைண்ட் வாய்ஸ்… ஹா ஹா…

மூனாவதா கெமிஸ்ட்ரி மிஸ், வழக்கம் போல “எழுதவே மாட்டேங்கிறான், ரொம்ப ஸ்லோ ரைட்டர், மோசமான ஹேண்ட்ரைட்டிங்…” என்று புகார்…

“ஏதாவது ஒரு நாள் வேகமா எழுதி முடிச்சிட்டா பாராட்டுங்க… மற்றபடி லேட்டா எழுதும் போது எப்பவுமே நீ இப்படித்தான்னு திட்டாதீங்க… மோடிவேஷன் ஸ்பீக்ஸ் ஹியர்…” என்று கொஞ்சம் அவங்களுக்கும் பாடம் எடுக்க வேண்டி ஆயிற்று…

எங்கள் மகன் செகண்ட் ரேன்க் வாங்கியிருக்கான். இதுல ஒரு எக்ஸாம் ஃபீவரோட போய் எழுதினான். தேர்ட் ரேன்க் இவனை விட 30 மார்க் கம்மி. ரைட்டு… இது டீச்சர்ஸிடம் ஓவர் எக்ஸ்பெக்டேஷனை தந்திருது… இன்னுமின்னுமென கல்லில் நார் உரிக்க மட்டுமே அவர்களுக்கு இந்த கல்விமுறை கற்றுக் கொடுக்கிறது…

நாலாவது டீச்சர்கிட்ட போனோம்…

“எதை படிக்க சொன்னாலும் உடனே படிச்சிடறான்… எழுத மட்டும் மாட்டேங்கிறான்… 10 கேள்வி படிக்க சொன்னாலும் அஞ்சே நிமிஷத்துல படிச்சிட்டு வந்திடறான்… சோ, நீங்க வீட்ல கொஞ்சம் படிச்சதை எழுத சொல்லுங்க…”

என்றார் அவர்…

“என்னங்க நீங்க… பேரண்ட்ஸ்க்கு பனிஷ்மெண்ட் கொடுக்கறீங்க… அவன் எழுதலைன்னா விட்ருங்க. எவ்ளோ முடியுதோ அவ்ளோ எழுதட்டும். நாலெட்ஜ் என்பது கற்றுக் கொள்வது தானே… எழுதுவது இல்லையே…”

சொல்லிட்டு கடைசியா

அஞ்சாவது மிஸ்ஸிடம் போனோம்…

“உங்க பையன் க்ளாஸ்ல டல்லா இருக்கான். நைட் சரியா தூங்க மாட்டான் போலிருக்கு. அதான் அப்படி இருக்கான்…” என்றார்…

“பத்து மணிக்கெல்லாம் படுத்திருவான் அவன். சில சமயம் திருட்டுத்தனமா மொபைல்ல கேம் விளையாடிட்டு இருப்பான்னு நினைக்கிறேன்… தனி ரூம்ல படுக்கறதால தெரியல எங்களுக்கு… இனி நைட்ல மொபைலை வாங்கி வெச்சிடறேன்” என்றேன்…

“கொஞ்ச நாளைக்கு பையனை உங்க கூட படுக்க வெச்சுக்கங்க…” என்று அந்த மிஸ் சொல்ல…

“ஏங்க பதினஞ்சு வயசு பையனை எப்டிங்க கூட படுக்க வைக்க முடியும்…?!” என்றேன் லேசான கடுப்புடன்…

“வேற வழியே இல்லைங்க… அவன் டென்த்… கொஞ்ச நாள் நீங்க உங்க கூட தான் படுக்க வெச்சுக்கணும்…” என்றார் மீண்டும்…

அவர் வலியுறுத்தி சொன்னதும் டென்ஷன் ஏறிடுச்சு எனக்கு… மூனு வயசில் இருந்தே அவன் தனியா தான் படுக்கறான்… ஃபீவர் வந்தா கூட மச்சான் தான் போய் அவன் ரூம்ல படுத்துக்குவாரே தவிர பையன் வந்து எங்க கூட படுக்க மாட்டான்… நான் கூப்பிட்டாலும் அவன் வர மாட்டான்…

இதை அவங்க கிட்ட சொல்லிட்டு அந்த டீச்சருக்கு ப்ரைவஸியின் அவசியம் பற்றி அஞ்சு நிமிஷம் நான் புளி போட்டு விளக்க… மற்ற எல்லா மிஸ்ஸும் சிரிச்சிட்டாங்க…

சரியான லூசு டீச்சர்ஸ்…
ஒருத்தர் அவனை smartங்கறாங்க ஒருத்தர் lazyங்கறாங்க…

படிப்பால் நானும் ஒரு டீச்சர் தான் என்பதை நிலைநாட்ட எனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு இது…

related posts

ஆச்சு… நமக்குன்னு ரெண்டு குழந்தைகள் ஆயாச்சு… ஏதோ வாழ்ந்தோம் முடித்தோமென்ற நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் வாழ்ந்து முடித்து விடுகிறார்கள்… எழுத்தார்வம், ரசனைகள், கலைத்திறன், தொழில் ஆசைகள் அத்தனையும் மனதுக்குள் புதைக்கப்படுகிறது. அப்படியே வெளிப்பட்டாலும் அது காசு என்னும் பிரதான நோக்கத்தில் தான் வெளிப்படுகிறது… நமக்கென ஒரு ஆத்மதிருப்திக்காக இவற்றை செய்கிறோமா… அப்படி செய்ய சொல்லும் போது, “நேரமே இல்லைங்க…” என்ற பதில் தானே வருகிறது… ரசனைமிக்க பெண்கள் கூட டிவி சினிமாவில் காதலைப் பார்த்து அதிலேயே […]

Read more

தமிழ்த்தலைவா… காப்பியமுரைத்துக் குறளோவியந்தீட்டிப் புனைவுகளாக்கி மொழித்தேனில் முக்கியெடுத்த கனிச்சுவைக் கரும்பைக் கணுவின்றிக் கவிச்சுவையில் நனைத்து அமிழ்து படைத்து ஆரியம் வென்ற அன்புத்தலைவா… எழுபிறவியை ஒரு பிறவியில் வாழ்ந்து மீள்பிறவியெடுத்தே மீண்டு வந்தாயும் போயப் பிழைதரும் பித்தர்களின் சொற்களைப் பொய்யாக்கிப் பொய்யாக்கியே எழுந்து நின்றாய்… மலர்ந்திருக்கும் மலரைத் தீண்டிப் பார்க்கும் மதிமயக்கும் மாலைத் தென்றலைப் போல் மனதிருக்குமுன் ஆற்றல் முன் மரணமும் தொட்டுச் சென்று தொட்டுச் சென்று வெட்கியதே… நாணியதே… ஈற்றிலுன்னை அரவணைத்தே இறப்புமின்று இறவாப் புகழ் பெற்றதே… […]

Read more

ASK Jhansi Home Care Products

);