Posted on Leave a comment

நலமே நாடு…சுகமாகும் வீடு

“டாக்டர் ராகுலுக்கு ஒன்னுமில்லையே”…பயத்துடன் டாக்டரிடம் படபடத்தாள் நந்தினி…..

ராகுல் பிரபல தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கிறான்.மாலை ஏற்பட்ட திடீர் வயிற்றுவலியால் பேமிலி டாக்டரிடம் அழைத்து வந்திருந்தாள் அவனது அம்மா.
“பயப்பட எதுவுமில்ல…..யூரின் இன்பெக்ஷன்…அடிக்கடி யூரின் பாஸ் பண்ணாததால் வந்த பிரச்சனை…ராகுல்,ஸ்கூல்ல டாய்லெட் நேரத்துக்கு போறியா இல்லையா”….குழந்தையை பார்த்துக் கேட்டார் டாக்டர்.

இல்ல அங்கிள்…ஸ்கூல் டாய்லெட் நல்லாவே இருக்காது…ஒரே வாடையாகத்தான் இருக்கும்..மிஸ் டாய்லெட் போக சொல்லுவாங்க..ஆனா.என்னோட ப்ரண்ட்ஸ் யாருமே ஒழுங்கா போகமாட்டோம்”…மழலை குரலில் கூறினான் ராகுல்.

“பாத்திங்களா,எவ்ளோ பெரிய ஸ்கூலாக இருந்தாலும் மற்ற விசயங்களில் இருக்கும் அக்கறை கழிப்பறை விஷயங்களில் இருப்பதில்லை…..முதல்ல ஸ்கூல் நிர்வாகத்திடம் பேசுங்கள்…ஒழுங்கான சுத்தமான டாய்லெட் வசதியை பண்ணித்தர சொல்லி அறிவுறுத்துங்கள்….மாணவர்களின் உடல்நலனிலும் அக்கறை செலுத்த வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமையல்லவா”..

“ஓகே டாக்டர்…ஸ்கூல் கரஸ்பான்டண்ட் என் கணவரின் பள்ளித்தோழிதான்…கண்டிப்பாக இதை அவங்க கவனத்துக்கு எடுத்துச்செல்கிறேன்.நன்றி டாக்டர் வருகிறேன்”…மருந்துகளை எழுதி வாங்கிக் கொண்டு விடைபெற்றாள் நந்தினி.

மறுநாள் காலை பதினொரு மணிக்கு அனுமதி பெற்று கரஸ்பான்டண்ட் தேவிகா மேடத்தை அவரது அறையில் சந்தித்தாள் நந்தினி.

வாங்க நந்தினி…நலமா?? , உங்க ஹஸ்பெண்ட் எப்படியிருக்கார்”…புன்னகையுடன் வரவேற்றார் தேவிகா.
தன் நலத்தை சொல்லி அவர் நலத்தையும் விசாரித்து சுருக்கமாக ராகுலுக்கு ஏற்பட்ட சுகவீனத்தை பற்றியும் டாக்டர் சொன்னதையும் சொல்லி டாய்லெட் சுத்தமின்மையையும் மெதுவாக எடுத்துரைத்தாள் நந்தினி.

பொறுமையாக கேட்ட தேவிகா மேடம் அழைப்பு மணியை அழுத்தி பியூனிடம் தேவி மிஸ்ஸையும் ஆயா கோசலை யையும் வரச்சொல்லி உத்தரவிட்டார்.இருவரும் அறைக்கு வந்தனர்.

“தேவி மிஸ்…..தினமும் டாய்லெட் சுத்தம் நடக்குதா…என்ன போட்டு கழுவ சொல்றிங்க…கம்ப்ளைண்ட் வருது”…என்றார்.

அதற்கு தேவிமிஸ் ஏதோ ஒரு கிளினர் பேரை சொல்லி அதைவிட்டு தினமும் கழுவி விடப்படுவதாகவும், கோசலை ஆயாம்மாவும், தினம் டாய்லெட் கழுவித்தாம்மா விடுறேன் ன்னும் சொன்னார்கள்.

நந்தினி குறுக்கிட்டு தான் கையோடு கொண்டு போயிருந்த ஆஸ்க் ஜான்ஸி டாய்லெட் கிளினரையும் ஆஸ்க் ஜான்ஸி செண்டட் பினாயிலையும் ஆயாம்மா கையில் கொடுத்து ‘இதை யூஸ் பண்ணிபாருங்க டாய்லெட் கிளின் கிரிஸ்டலாக இருக்கும்.மேலும் சுவாசத்திற்கு தீங்கு விளைவிக்காத தரமான பொருட்களால் மிகுந்த நறுமணம் கொண்ட செண்டட் பினாயிலை பற்றியும் எடுத்துச்சொல்லி எப்படி யூஸ் பண்ணுவது என்பதையும் எடுத்துரைத்தாள்….

” ஏன் நந்தினி நீங்க தர்றீங்க…..நீங்க பேரைமட்டும் சொல்லுங்க…நானே வாங்கிக்கொள்கிறேன்”என்றார் தேவிகா.

இந்த ஒருதடவை யூஸ் பண்ணட்டும் மேடம்….அடுத்தமுறை நீங்க வாங்கிருங்க”…என்று கூறி ஆன்லைன்ல எப்படி வாங்குவது என்ற விவரத்தையும் சொல்லி நன்றியுடன் புன்னகைத்து விடைபெற்றாள்.

நான்கு நாட்கள் கழித்து ஸ்கூல் விட்டு ஓடிவந்த ராகுல் தாயின் கழுத்தை இறுக்கி கட்டி முத்தமிட்டான்.

“மம்மி….எங்க ஸ்கூல் டாய்லெட் இப்போ நம்ம வீட்டு டாய்லெட் மாதிரியே வாசனையா சுத்தமா இருக்கு மம்மி…..நான் தெனம் ரெண்டு தடவ ஒன்பாத் போயிடுறேன்…என்ன மேஜிக் பண்ணாங்கன்னே தெரியலை”….என்றான் மழலையாய்…..
மனதுக்குள் சிித்துக்கொண்டாள் நந்தினி.”ஆமாண்டா கண்ணா..’எல்லாம் ஆஸ்க் ஜான்ஸி செய்த மாயம்’….மகனை அணைத்து முத்தமிட்டாள் அன்னை.

Leave a Reply