ASK Jhansi Fans Club

ஆஸ்க் ஜான்சி ஸ்டோரி...
 
Notifications

ஆஸ்க் ஜான்சி ஸ்டோரில் கெமிக்கல்ஸ் வாங்குவது எப்படி?  

   RSS

1

நாம் ஆஸ்க் ஜான்சி ஸ்டோரில் கெமிக்கல்ஸ் எப்படி ஆர்டர் செய்து வாங்குவது என்பது பற்றி விளக்கவும்?

This topic was modified 3 weeks ago 2 times by ASK Admin

Premalatha

1 Answer
0

ஆஸ்க் ஜான்சி ஸ்டோர் என்பது ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் விற்பனைக்காக மட்டுமே இயங்குகிறது. கெமிக்கல்ஸ் வாங்க வேண்டுமென்றால் ஆஸ்க் ஜான்சி கெமிக்கல் ஷாப் என்று தனியாக ஒரு தளம் இயங்குகிறது. அதில் சென்று வாங்கலாம். 

ஆன்லைன் கெமிக்கல் ஷாப்பில் கெமிக்கல்ஸ் ஹோல்சேலாகவும் ரீட்டெயிலாகவும் கிடைக்கும். கெமிக்கல்களை டீலர்கள் மூலம் அனுப்புவதில்லை. நேரடியாக தான் வாங்க வேண்டும். ஆர்டர் போட்டு விட்டு பணம் செலுத்தினால் நேரடியாக ரெகுலர் லாரி சர்வீஸில் அனுப்பி வைப்போம். லாரி ஆஃபீஸ் போய் ட்ரான்ஸ்போர்ட் சார்ஜ் செலுத்தி நீங்கள் தான் பெற்றுக் கொள்ள வேண்டும். டோர் டெலிவரி மற்றும் கேஷ் ஆன் டெலிவரி தர இயலாது. 

கெமிக்கல் விற்பனை என்பது சிறு தொழில் செய்பவர்களுக்காக மட்டுமே. நுகர்வோருக்கானதல்ல. அதனால் மினிமம் 1000 ருபாய்க்கு ஆர்டர் தந்தால் தான் அனுப்பி வைக்க முடியும். அதோடு கெமிக்கல் விலைகள் தினமும் மாறக் கூடியது. மார்க்கெட்டில் விலை ஏறினால் ஏற்றி விடுவோம். இறங்கினால் இறக்கி விடுவோம். 

கெமிக்கல்களை விற்பனை மற்றும் ஹேண்ட்லிங் செய்ய வேண்டுமென்றால் அதற்கென சில லைசன்ஸ்கள் தேவை. அதனால் அதை டீலர் மூலம் விற்பனை செய்ய இயலாது. டீலர்களுக்கும் கெமிக்கல்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆகையால் யாரும் ஆஸ்க் ஜான்சி டீலர்களிடம் கெமிக்கல்கள் வாங்கித் தருமாறு கேட்க வேண்டாம். 

Share:

உங்கள் சந்தேகங்களை அந்தந்த தலைப்பின் கீழ் கேட்கலாம். உங்கள் பங்களிப்புக்கு ஸ்டார்கள் வழங்கப்படும். அதை பயன்படுத்தி இலவசமாக ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்ஸ் வாங்கிக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இதுவரை நீங்கள் பெற்றுள்ளவை

0 ASK Jhansi Coins
0 ASK Jhansi Stars