FAQ

1. ஆஸ்க் ஜான்சி டீலர்ஷிப் எடுப்பது எப்படி ?

டீலர்ஷிப் குறித்த முழு விவரங்கள் மற்றும் அதற்கான அப்ளிகேசன் இந்த பக்கத்தில் உள்ளது. க்ளிக் செய்யவும் >>>

2. ஆஸ்க் ஜான்சி பொருட்களை ஹோல்சேல் விலையில் எப்படி வாங்கி விற்பது ?

ஹோல்சேல் விலையில் ஆஸ்க் ஜான்சி பொருட்களை வாங்கி விற்பது குறித்த சந்தேகங்களுக்கும் இங்கே க்ளிக் செய்யவும் >>>

3. கெமிக்கல்ஸ் ஏன் குறைந்தபட்சம் 1000 ருபாய்க்கு ஆர்டர் செய்ய வேண்டும். குறைவாக ஆர்டர் செய்ய இயலாதா ?

இந்த நிபந்தனை கெமிக்கல்ஸுக்கு மட்டுமே. ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்ஸ் நீங்கள் குறைந்தபட்சமாக 199 ருபாய்க்குக் கூட ஆர்டர் செய்யலாம். கெமிக்கல்ஸுக்கு கண்டிப்பாக ஜி எஸ் டி செலுத்த வேண்டுமா ? ஏன் 1000 ருபாய்க்கும் குறைவாக ஆர்டர் போட முடியவில்லை ? கெமிக்கல்ஸ் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் இங்கே பதில் உள்ளது. க்ளிக் செய்யவும் >>>

பொதுவான சந்தேகங்களும் பதில்களும்

4. நேரில் வந்து பொருட்கள் வாங்க முடியுமா ?

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் தாராளமாக நேரில் வந்து வாங்கலாம். முகவரி மற்றும் லேண்ட்மார்க் விவரங்களை இங்கே காணலாம்… >>>

5. உங்கள் தொலைபேசி எண்ணுக்கு கால் செய்தேன்… யாரும் போன் எடுக்கவில்லை ?

790 456 9575 என்ற எண் வாட்ஸ் ஆப்புக்கு மட்டுமே. அந்த எண் எப்போதும் சைலண்ட் மோடில் இருக்கும். தயவுசெய்து அந்த நம்பருக்கு யாரும் கால் செய்ய வேண்டாம். எங்களுடைய கஸ்டமர் கேர் நம்பரான 0424-2292575 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால் கண்டிப்பாக போன் எடுப்பார்கள். எனினும் ஆர்டர் குறித்த விவரங்களுக்கு மட்டும் கால் செய்யுங்கள். வீடியோ குறித்த சந்தேகங்களுக்குக் கால் செய்ய வேண்டாம். அவ்வாறு தொடர்ந்து தேவையில்லாத போன்கால்கள் வருவதால் முக்கியமான ஆர்டர் சம்பந்தமான போன்கால்கள் எங்களுக்கு மிஸ் ஆகிறது.

6. COD வசதி உள்ளதா ?

கெமிக்கல்ஸ் ஆர்டருக்கு COD வசதி இல்லை. அது தனி கிளை. ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸுக்கு டீலர்கள் இருக்கும் பகுதிக்கு COD வசதி உள்ளது. தற்சமயம் தமிழகத்தின் பாதி இடங்களை டீலர்கள் மூலம் கவர் செய்திருக்கிறோம். மீதி இடங்களுக்கு டீலர்கள் போடும் முயற்சியில் உள்ளோம். ஆகையால் டீலர்கள் இல்லாத ஏரியாக்களில் COD கிடைக்காது. ஜிபே மூலம் பணம் செலுத்தலாம். வருங்காலத்தில் டீலர்களை நியமித்து விட்டால் COD கிடைக்கும்.

7. ஏன் என்னுடைய ஆர்டர் ப்ராஸஸ் ஆகவில்லை ?

கெமிக்கல் ஆர்டர்கள் என்றாலும் சரி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆர்டர் என்றாலும் சரி COD இல்லாத ஆர்டர்கள் என்றால் பணம் செலுத்தியதும் ஆட்டோமேட்டிக் ஆகப் ப்ராஸஸ் ஆகி விடும். தினமும் 500 க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வருவதால் எல்லாருக்கும் போன் செய்து பணம் கட்டுங்கள் என்று சொல்வது இயலாத காரியம். வாட்ஸ் ஆப் வழியாக உங்களுக்கு மெசேஜ் வரும். பணம் கட்டிவிட்டு 790 456 9575 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு பேமண்ட் ரசீது அனுப்பி விட்டால் ஆட்டோமேட்டிக்காக ஆர்டர் பில் ஆகி விடும். ஆர்டர் பில் ஆகும் போதும் டெஸ்பாட்ச் ஆகும் போதும் உங்களுக்கு அது குறித்த மெசேஜ்கள் ஆட்டோமேட்டிக் ஆக வாட்ஸ் ஆப்பில் வந்து விடும்.

8. எனக்கு ஆப் மூலம் ஆர்டர் போடத் தெரியவில்லை. நேரடியாக வாட்ஸ் ஆப் மூலம் ஆர்டர் செய்ய இயலுமா ?

எங்களுக்கு எந்த ஆப்பும் இல்லை. https://www.askjhansi.com போய் வேண்டும் பொருட்களை செலக்ட் செய்து முகவரி எழுதி க்ளிக் செய்தால் போதும் நேரடியாக வாட்ஸ் ஆப்புக்கே ஆர்டர் வந்து விடும். சைன் அப் செய்யத் தேவையில்லை. ஈமெயில் முகவரி தேவையில்லை.

இது தவிர மற்ற வழிகளில் ஆர்டர் வந்தால் எங்களால் கணக்கு வைக்க முடியாது. தினமும் வாட்ஸ் ஆப் வழியாக 500+ மெசேஜ்கள் வருவதால் ஆர்டர்கள் மிஸ் ஆகி விடும். அதனால் நேரடியாக வாட்ஸ் ஆப் மூலம் வரும் ஆர்டர்களை நாங்கள் ஏற்பதில்லை.

9. வாட்ஸ் ஆப் மூலம் பேமண்ட் ரசீது அனுப்பினோம். யாரும் பார்க்கவில்லை ?

எங்கள் ஊழியர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி வாட்ஸ் ஆப் மெசேஜ்களைப் பார்ப்பார்கள். அதுவரை தயவுசெய்து காத்திருக்கவும். அரசு விடுமுறை நாட்கள் என்றால் அடுத்த வேலை நாளின் போது மெசேஜ் பார்ப்பார்கள்.

10. ஆஸ்க் ஜான்சி மேடமை எப்படி தொடர்பு கொள்வது ?

ஆஸ்க் ஜான்சி மேடமை அலுவலக தொலைபேசி மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொள்ள இயலாது. அவர்கள் அலுவலகம் வருவதில்லை. வீட்டில் இருந்து இந்த தொழிலை இயக்குகிறார்கள். அதனால் அவர்களை chanakiyan.jhansi@gmail.com மூலம் தொடர்பு கொள்ளலாம். முக்கியமான விஷயம் என்றால் கண்டிப்பாக பதில் தருவார்கள்.

11. ஆர்டர் செய்த பொருளை எப்படி கேன்சல் செய்வது ?

ஆர்டர் செய்த பொருளுக்கு பணம் செலுத்தாவிட்டால் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அதுவாகவே கேன்சல் ஆகி விடும். அதனால் அது பற்றி கஸ்டமர்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் ஆர்டர் டீலர் மூலம் சப்ளை செய்யப் படுகிறது என்றால் டெலிவரி செய்யும் முன் உங்களுக்கு டீலர் கால் செய்வார். அப்பொழுது அவரிடம் சொன்னால் கேன்சல் செய்து விடுவார்.

12. பொருளை ஆர்டர் செய்து விட்டேன். கூடுதலாக அதில் ஒரு பொருளை சேர்க்க வேண்டும். எப்படி சேர்ப்பது ?

பழைய ஆர்டரை அப்படியே விட்டு விட்டு புதிதாக மீண்டும் ஆர்டர் செய்து பணம் செலுத்துங்கள். பழைய ஆர்டர் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அதுவாகவே கேன்சல் ஆகி விடும்.

13. ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட் உடன் எனக்கு ஒரே ஒரு கெமிக்கல் மட்டும் வேண்டும். அனுப்ப இயலுமா ?

இரண்டும் தனித்தனி கிளை, தனித்தனி கணக்கு என்பதால் கண்டிப்பாக அவ்வாறு அனுப்ப இயலாது. ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் கூரியர் மூலம் அனுப்பப்படுகிறது. கெமிக்கல்ஸில் மிகக் குறைவான மார்ஜினே வைத்திருப்பதால் அதை கூரியர் மூலம் அனுப்பினால் எங்களுக்கு நஷ்டம் ஆகும். அதனால் அவ்வாறு அனுப்புவது சாத்தியமில்லை.

வேண்டுமென்றால் கெமிக்கல்ஸ் ஆர்டர் செய்யும் இந்த லின்க்கில் கெமிக்கல்ஸ் கூட சேர்த்து ஹோம்கேர் ப்ராடக்ட்ஸும் ஆர்டர் செய்யலாம். அவ்வாறு அனுப்பும் போது ரெகுலர் லாரி சர்வீஸில் புக் செய்வோம். லாரி வாடகை உங்களைச் சேர்ந்தது. மினிமம் 1000 ருபாய்க்கு ஆர்டர் செய்ய வேண்டும்.

14. வீடியோ குறித்த சந்தேகங்களை எப்படி தீர்த்துக் கொள்வது ?

தயவுசெய்து வீடியோ குறித்த சந்தேகங்களை வீடியோ கமெண்ட்டில் மட்டும் கேட்கவும். அலுவகத்தில் இருப்பது கம்பெனி ஊழியர்கள். அவர்களுக்கு வீடியோ பற்றி எதுவும் தெரியாது.

15. கெமிக்கல்ஸ் என்ன அளவில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து எனக்கு சந்தேகம் உள்ளது. அதை யாரிடம் கேட்பது ?

நாங்கள் வைத்திருப்பது கெமிக்கல்ஸ் கடை. தினமும் பல பேர் நேரில் வந்து வாங்கிச் செல்கிறார்கள். அதை விரிவுபடுத்தி ஆன்லைனிலும் விற்பனை செய்கிறோம். மற்றபடி கெமிக்கல் ஃபார்முலாக்கள் எதுவும் எங்கள் ஊழியர்களுக்குத் தெரியாது. கேட்கும் பொருளை அவர்கள் எடுத்துக் கொடுப்பார்கள் அவ்வளவு தான். வீடியோ குறித்த சந்தேகங்களை அந்தந்த வீடியோ கமெண்ட்டில் கேளுங்கள்.

16. வீடியோவில் கூறப்பட்ட விலையை விட இப்போது விலை கூடுதலாக இருக்கிறதே… ?

ஆஸ்க் ஜான்சி மேடம் 2017 முதல் வீடியோ போட்டு வருகிறார்கள். பல கெமிக்கல்களின் விலை அப்போது இருந்ததை விட இப்போது பல மடங்கு ஏறி விட்டது. வீடியோ போட்ட தேதியைப் பார்த்தால் உங்களுக்கே அது புரியும்.

17. நான் கெமிக்கல்ஸ் ஆர்டர் போட்டு வாங்கிய பின் இப்போது உங்கள் வெப்சைட்டில் விலை குறைவாகக் காட்டுகிறதே ?

கெமிக்கல்ஸ் விலை தங்கத்தின் விலையைப் போல. தினமும் கூடவும் செய்யும் குறையவும் செய்யும். நாங்கள் டன் டன்னாக கெமிக்கல்ஸ் வாங்குகிறோம். ஒவ்வொரு லோடு வரும் போதும் விலைகளில் மாற்றம் இருக்கும். விலை ஏறினால் ஏற்றி விடுவோம். இறங்கினால் இறக்கி விடுவோம்.

18. எந்த அக்கவுண்ட்டுக்கு எப்படி பேமண்ட் செய்வது ?

நீங்கள் ஆர்டர் போட்ட உடன் உங்களுக்கு ஒரு ரசீது வாட்ஸ் ஆப் மூலம் வரும். அந்த மெசேஜுக்கு நீங்கள் பதில் அளித்த உடன் அது ப்ளூ கலரில் லின்க் ஆக மாறி விடும். பேன்க் அக்கவுண்ட் விவரங்கள், ஜிபே எண், யூபிஐ ஐடி ஆகியவை அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். உங்கள் ஆர்டர் COD என்றால் வங்கி கணக்கு விவரங்கள் ஏதும் கொடுக்கப்பட்டிருக்காது.

19. என் ஆர்டர் COD தான். ஆனால் நான் GPay வழியாக பணம் செலுத்த விரும்புகிறேன். எப்படி செலுத்துவது ?

உங்கள் ஆர்டர் COD என்றால் அது டீலர் மூலம் சப்ளை செய்யப்படும். உங்களுக்கு டெலிவரி செய்ய டீலர் கால் செய்வார். அப்போது அவருடைய  தனிப்பட்ட ஜிபே எண்ணைப் பெற்று தொகை செலுத்தலாம்.

20. ஆர்டர் செய்த பொருட்களை எப்படி எப்போது அனுப்பி வைப்பீர்கள் ?

அதிகப்பட்சமாக ஒரு வார்த்துக்குள் அனுப்பி விடுவோம். ST Courier மற்றும் Franch Express ஆகிய கூரியர்களுடன் எங்களுக்கு டை அப் இருக்கிறது. அதனால் அந்த இரண்டு கூரியர்கள் மூலம் மட்டுமே எங்களால் அனுப்ப இயலும். மற்ற கூரியர்கள் மூலம் அனுப்ப இயலாது. உங்கள் ஊரில் இந்த கூரியர் வசதி இல்லை என்றால் அருகில் இருக்கும் கூரியர் ஆஃபீஸுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். அது இயலாது என்பவர்கள் ஆர்டர் செய்ய வேண்டாம்.

கெமிக்கல்ஸ், ரீசெல்லர் மற்றும் டீலர்களின் ஆர்டர்களை நாங்கள் ரெகுலர் லாரி சர்வீஸ் மூலம் அனுப்பி வைப்போம். மேலே அவற்றுக்கான சந்தேகங்களை தனித்தனி லின்க் ஆகக் கொடுத்துள்ளோம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

22. எந்த லாரி சர்வீஸில் அனுப்பி வைப்பீர்கள் ?

ARC, MSS, Kalyana Sundaram, Navata, Parveen, Raja போன்ற சில லாரி சர்வீஸில் வழக்கமாக அனுப்புவோம். கெமிக்கல்ஸ் ஆர்டர் என்றால் உங்கள் ஊருக்கு எந்த லாரி போகிறதென்று பார்த்து விட்டு உங்களுக்கு போன் செய்து கேட்டு விட்டு தான் அனுப்புவோம். குறிப்பிட்ட சர்வீஸில் அனுப்ப வேண்டும் என்றால் ஆர்டர் போடும் போது Notes பகுதியில் நீங்கள் குறிப்பிடலாம்.

23. GST பில் கிடைக்குமா ? 

நேரடியாக கம்பெனியில் இருந்து சப்ளை செய்யும் எங்களுடைய எல்லா பொருட்களுக்கும் GST பில் உண்டு. உங்களிடம் GST இருந்தால் ஆர்டர் போடும் போது GST எண்ணை Notes பகுதியில் குறிப்பிட்டால் போதும். அந்த எண்ணுடன் பில் தந்து விடுவோம். நீங்கள் Input Tax Credit எடுத்துக் கொள்ளலாம்.

24. ஆர்டர் குறித்த நிறை குறைகளை எப்படி நாங்கள் தெரிவிப்பது ?

ஒவ்வொரு ஆர்டரும் டெலிவரி செய்த பின் வாட்ஸ் ஆப் வழியாக Delivered மெசேஜ் வரும் போது அதில் ஒரு Feedback Form வரும். அதில் உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம். அது நேரடியாக ஆஸ்க் ஜான்சி மேடமின் பார்வைக்குச் செல்லும்.