verado-lite

அடர்த்தியான நீளமான கருங்கூந்தல் பெற

ஆறு மாதங்களில் மூன்றடி கருங்கூந்தல் வளர எப்படி எண்ணெய் காய்ச்சுவது என்று நான் நம்ம சேனலில் போட்ட வீடியோ ஒரு

அடர்த்தியான நீளமான கருங்கூந்தல் பெற

ஆறு மாதங்களில் மூன்றடி கருங்கூந்தல் வளர எப்படி எண்ணெய் காய்ச்சுவது என்று நான் நம்ம சேனலில் போட்ட வீடியோ ஒரு மில்லியன் வ்யூஸ் தாண்டி விட்டது. நூற்றுக்கணக்கான பாசிடிவ் ரிவ்யூஸ். இந்த வீடியோவுக்கு பின்னனியில் சுவையான கதை இருக்கு. அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சேனல் ஆரம்பித்த புதிதில் என் பேஸ்புக் பேஜில் மகள் என் காலில் பாசத்துடன் நகம் வெட்டி விடும் படத்தை முகத்தை மட்டும் கட் பண்ணிட்டு நெருங்கிய நட்புகளுக்குள் பகிர்ந்திருந்தேன். அதில் அவள் காலின் மேல் கூந்தல் நுனி கிடந்ததை நான் கூட கவனிக்கல. ஆனா எல்லா தோழிகளும் அதைப் பற்றியே கேட்க, மகள் தானே காய்ச்சி பயன்படுத்தும் எண்ணெய் பற்றி கமெண்ட்டில் விளக்கம் கொடுத்துவிட்டு, அடுத்த முறை காய்ச்சும் போது வீடியோ எடுத்து போடுகிறேன் என்று சொன்னேன்… அப்படி போட்டது தான் அந்த வீடியோ…

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால்… மகளுக்கு டைபாய்டு காய்ச்சல் காரணமாக முடி கொட்டி அடர்த்தியும் நீளமும் குறைந்திருந்த சமயம் அது… அப்ப ரெண்டு ட்ரீட்மெண்ட் அவளாகவே செய்ய ஆரம்பித்தாள். அதில் ஒன்று இந்த எண்ணெய் இன்னொன்று சொட்டைத் தலையில் முடி வளர என்று நான் போட்ட இந்த வீடியோ…

இரண்டும் ஒன்றாக ஒரே நேரத்தில் செய்யும் போது நல்ல பலன் கொடுத்தது. நிறைய பேர் என்னிடம் உங்க முடியைக் காட்டுங்கள் என்று சொன்னார்கள். அது என் முடி அல்ல. ஏன்னா நான் தலைக்கு எண்ணெய் தடவியே பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு நீண்ட கூந்தல் பராமரிப்பு பிரச்சினை என்பதால் நான் அப்பப்ப கட் பண்ணி விடுவது வழக்கம். ஆனா இந்த எண்ணெய் என் மகளுக்கு மட்டுமல்லாமல் என் 58 வயதான அம்மாவுக்கும் நல்ல பலன் தந்தது. பெரும்பாலும் மகள் பாட்டி வீட்டில் இருப்பதால், அவங்க ரெண்டு பேரும் தான் இந்த விஷயத்தில் கூட்டணி…

இந்த எண்ணெய்யை சரியான பக்குவத்தில் தீய்ந்து போய்விடாமல் காய்ச்ச வேண்டும். இரும்பு சட்டி இல்லாவிட்டால் சாதா சட்டி கூட பயன்படுத்தலாம். தினமும் தேங்காய் எண்ணெய் போல பயன்படுத்த வேண்டும். இதை தடவும் போது முடி வளரும் முன் முதலில் முடி கொட்டுவது தான் நிற்கும்.

எண்ணெய் காய்ச்சும் வீடியோ:

இந்த எண்ணெயைத் தடவ ஆரம்பிக்கும் முன்பாக இன்னொரு முக்கியமான விஷயம் தலையில் பொடுகு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் முதலில் அதை சரி செய்த பின் தான் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் பலன் கிடைக்காது. அதோடு புழுவெட்டு போன்ற பிற பிரச்சினைகள் இருந்தாலும் பலன் தராது.

பொதுவாகவே டாக்டர் தரும் மருந்து எல்லாருக்கும் வேலை செய்து விடுவதில்லை. அப்படித்தான் இந்த எண்ணெயும். அவரவர் உடல்வாகு, வயது, பரம்பரைத் தன்மைகளுக்கேற்ப பலன் தரும். உபயோகிக்க ஆரம்பித்து மூன்று மாதங்களிலேயே மாற்றத்தை உணரலாம். 90 சதவீதம் பேருக்கு நல்ல பலன் தந்திருக்கிறது.

உங்களுக்குப் பொடுகு இருந்தால் இந்த வீடியோ பார்த்து அதை நீக்கிக் கொள்ளுங்கள். இது சின்ன வயதில் எனக்கு எங்க அம்மா செய்த ட்ரீட்மெண்ட். அப்பவெல்லாம் அம்மியில் அரைத்துத் தடவி விடுவார்கள்… உடனே பொடுகு மாயமாய் மறைந்து விடும். இந்த வீடியோவில் பவுடரை வைத்து டெமோ செய்திருக்கிறேன்.

related posts

ஆச்சு… நமக்குன்னு ரெண்டு குழந்தைகள் ஆயாச்சு… ஏதோ வாழ்ந்தோம் முடித்தோமென்ற நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் வாழ்ந்து முடித்து விடுகிறார்கள்… எழுத்தார்வம், ரசனைகள், கலைத்திறன், தொழில் ஆசைகள் அத்தனையும் மனதுக்குள் புதைக்கப்படுகிறது. அப்படியே வெளிப்பட்டாலும் அது காசு என்னும் பிரதான நோக்கத்தில் தான் வெளிப்படுகிறது… நமக்கென ஒரு ஆத்மதிருப்திக்காக இவற்றை செய்கிறோமா… அப்படி செய்ய சொல்லும் போது, “நேரமே இல்லைங்க…” என்ற பதில் தானே வருகிறது… ரசனைமிக்க பெண்கள் கூட டிவி சினிமாவில் காதலைப் பார்த்து அதிலேயே […]

Read more

தமிழ்த்தலைவா… காப்பியமுரைத்துக் குறளோவியந்தீட்டிப் புனைவுகளாக்கி மொழித்தேனில் முக்கியெடுத்த கனிச்சுவைக் கரும்பைக் கணுவின்றிக் கவிச்சுவையில் நனைத்து அமிழ்து படைத்து ஆரியம் வென்ற அன்புத்தலைவா… எழுபிறவியை ஒரு பிறவியில் வாழ்ந்து மீள்பிறவியெடுத்தே மீண்டு வந்தாயும் போயப் பிழைதரும் பித்தர்களின் சொற்களைப் பொய்யாக்கிப் பொய்யாக்கியே எழுந்து நின்றாய்… மலர்ந்திருக்கும் மலரைத் தீண்டிப் பார்க்கும் மதிமயக்கும் மாலைத் தென்றலைப் போல் மனதிருக்குமுன் ஆற்றல் முன் மரணமும் தொட்டுச் சென்று தொட்டுச் சென்று வெட்கியதே… நாணியதே… ஈற்றிலுன்னை அரவணைத்தே இறப்புமின்று இறவாப் புகழ் பெற்றதே… […]

Read more

ASK Jhansi Home Care Products

);