verado-lite

அந்த கடைசி நிமிடங்கள்

ஆறு மணி... அதிகப்பட்சமாக ஏழு மணிக்குள் முடித்தாக வேண்டும்... காலையில் கண்விழித்ததில் இருந்து பரபரவென வேலை செய்து கொண்டே இருக்கிறேன்.

அந்த கடைசி நிமிடங்கள்

ஆறு மணி… அதிகப்பட்சமாக ஏழு மணிக்குள் முடித்தாக வேண்டும்… காலையில் கண்விழித்ததில் இருந்து பரபரவென வேலை செய்து கொண்டே இருக்கிறேன். அடுப்பை பற்ற வைக்கக் கூட நேரமில்லை. ஓட்டலில் உணவை வரவழைத்து சாப்பிட்டு அடுத்த நிமிடம் மீண்டும் பணியில் மூழ்கிப் போக…

சின்ன தம்பி குடும்பமும் அம்மா அப்பாவும் வீட்டுக்கு வருவதாக கால் வந்தது. தம்பி லண்டனில் இருந்து லீவுக்கு வந்திருப்பதால் இன்னொரு நாள் வரச் சொல்லவும் முடியாது.

அவசரமாக கம்பெனி ஆட்களை அழைத்து வீட்டைக் கொஞ்சம் க்ளீன் செய்ய சொன்னேன். ரெண்டு வாண்டுகளுக்காக தரை துடைத்து சுத்தம் செய்ய… தம்பி வர லன்ச் டைம் நெருங்கிடுச்சு… ஒன்னுமே இல்ல வீட்டில்…

“வீட்டுக்கு போகும் போது பிரியாணி பார்சல் வாங்கிட்டு போகலாம்னு இருக்கோம்…” னு தம்பி சொல்ல…

“அட… இரு… இங்கேயே ஆம்பூர் பிரியாணி ஆர்டர் செய்திடலாம்…” னு அவசரமாக வாங்கி வர… திருப்தியாக மதிய உணவு முடிந்தது…

மணியைப் பார்க்கிறேன்… மணி மதியம் ரெண்டரை… ஏழு மணிக்குள் முடித்தாக வேண்டும்… ஆண்டவா… மனசு படபடங்குது…

தம்பியின் நாலு வயது மகளை மட்டும் என் மகள் பிடித்து வைத்துக் கொண்டாள், இரவு கொண்டு வந்து விடுகிறோம் என்று…

நான் சிஸ்டமில் மூழ்கிக் கிடக்க… தம்பி மகள் அழகு மழலையில் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தாள்…

“மம்மி டிஸ்டர்ப் ஆ இருந்தா சொல்லுங்க. என் ரூமுக்கு அழைச்சிட்டு போய்டறேன்…”

“நோ… நோ… இங்கேயே இருக்கட்டும்… என் மன அழுத்தம் குறையுது அவளால…” மழலையை ரசித்தபடியே வேலைகளைத் தொடர்ந்தேன்…

1ம் தேதி லான்ச். சொல்லியாச்சு.
இனியும் தாமதிப்பது நல்லதல்ல.
ஆனாலும் வெப்சைட்ல ஒர்க் முடியல.

சற்று நேரத்தில் சமையல் வேலைக்கு ஆள் வேண்டுமான்னு கேட்டு தெரிந்த அக்கா ஒருத்தர். அவரிடம் பேசி அனுப்ப… நம்ம சப்ஸ்க்ரைபர் + ஊர்க்காரங்க, விழுப்புரத்தில் வாழ்க்கைப்பட்டு இப்ப ஊர் வந்தவங்க என்னைப் பார்க்க வந்தாங்க…

அப்படியே முள் மேல் நிற்பது போல பணிச்சுமை. பேலண்ஸ் பண்ண முடியல. விட்டா அழுதிருப்பேன். ஆனா அழுதா அதில் வேறு ஐந்து நிமிடம் வீணாகி விடுமே என்ற எண்ணத்தில் என்னால அழக் கூட முடியல. நல்லவேளை அவர் இங்கிதத்துடன் சீக்கிரம் போய்விட்டார்.

மணி பார்த்தேன்… மாலை 5 ஐத் தாண்டி இருந்தது. மகனுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருப்பதால் 6.30க்கு தான் பள்ளி விடுவார்கள். 8 மணி ஆகும் அவன் பஸ்ஸில் வீடு வர. சோ நாம கார்ல போய் பிக்கப் செய்துக்கலாம்னு மச்சான் (ஹஸ்) சொல்ல…

கிளம்பும் நேரம் பெரிய தம்பியின் மரணம் குறித்து விசாரிக்க உறவுக்காரர்கள் வந்துவிட்டார்கள். அவங்க கூட பேசி… தம்பியை நினைத்து கண்கலங்கும் போது இன்னும் முடிக்காத பணிகளையும் நினைத்தே தான் கண்கலங்கினேன்.

இதில் வேறு என் தம்பி மகளிடம், “தண்ணீர் காட்டுகிறேன்…” என்று சொல்லியிருந்தேன். மகன் ஸ்கூலுக்கு போகும் வழியில் ஒரு பேரேஜ் இருக்கு. அணைக்கட்டு போன்ற அழகான பகுதி.

ஒரு வழியாக 6 மணிக்கு உறவுகள் போய்விட… மகன் ஸ்கூலுக்குக் கிளம்பினோம். எனக்கோ இன்னும் ஒரு மணி நேர வேலை பாக்கி இருந்தது. லேப்டாப்பை கையில் எடுத்தபடியே… கார் முன்சீட்டில் அமர்ந்து என் பணியைத் தொடர்ந்தேன்…

“மேடம் தேதி 1 ஆய்டுச்சு…” என்று அதற்குள் ஏகப்பட்ட கமெண்ட்ஸ். டீலர்களிடமிருந்து போன்கால்கள்… வாட்ஸ் ஆப் மெசேஜ்கள்… இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது எனக்கு… ஆண்டவா எனக்கு பலம் கொடு… நான் முடித்தே ஆக வேண்டும்…

10 கிமீ தொலைவில் இருக்கும் மகன் பள்ளிக்கு போன பின் அவன் ஸ்கூல் பஸ்ஸில் ஏறிப் போய்விட்டான் என்று தெரிந்தது. ரிடர்ன் வரும் வழியில் சற்றே அகலமான ஒரு சாக்கடையைப் பார்த்ததும்… “ஐ தண்ணி பார்த்துட்டனே…” என்றாள் தம்பி மகள்…

அதுவரை லேப்டாப்பில் இருந்து நிமிரவில்லை நான். அவள் சொன்னதும் பாவமாகப் போய்விட்டது… “பேரேஜ் போங்க…” என்றேன் மச்சானிடம்…

இருள் கவியத் துவங்க… ஆள் அரவமற்ற சாலையில் செல்லச் செல்ல மனதில் லேசான பயம்… வழியில் சிற்றோடை வர… அதைக் காண்பித்து, “இங்க பார் தண்ணி…” என்று சொல்லிவிட்டு பேரேஜ் வரை போகாமலே வண்டியைத் திருப்பி விட்டோம்…

மீண்டும் நான் லேப்டாப்பில் மூழ்கிப் போனேன். மணி ஏழு தாண்ட… உஸ்ஸ்ஸ் அப்பாடா… காரில் போகப் போகவே வேலைகளை முடித்து ஒரு வழியாக வெப்சைட் ஓப்பன் செய்து விட்டாச்சு…

பெருத்த நிம்மதியுடன் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு கார் சீட்டில் சாய்ந்து கண்களை மூடினேன்… ஆக்ரோஷமான மழையொன்று பெய்து ஓய்ந்ததைப் போலவே என் மனம்…

இப்படித்தான் 1/8/2018 அன்று நமது ஆஸ்க் ஜான்ஸி இணையதளம் www.askjhansi.com லான்ச் செய்யப்பட்டது…

related posts

ஆச்சு… நமக்குன்னு ரெண்டு குழந்தைகள் ஆயாச்சு… ஏதோ வாழ்ந்தோம் முடித்தோமென்ற நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் வாழ்ந்து முடித்து விடுகிறார்கள்… எழுத்தார்வம், ரசனைகள், கலைத்திறன், தொழில் ஆசைகள் அத்தனையும் மனதுக்குள் புதைக்கப்படுகிறது. அப்படியே வெளிப்பட்டாலும் அது காசு என்னும் பிரதான நோக்கத்தில் தான் வெளிப்படுகிறது… நமக்கென ஒரு ஆத்மதிருப்திக்காக இவற்றை செய்கிறோமா… அப்படி செய்ய சொல்லும் போது, “நேரமே இல்லைங்க…” என்ற பதில் தானே வருகிறது… ரசனைமிக்க பெண்கள் கூட டிவி சினிமாவில் காதலைப் பார்த்து அதிலேயே […]

Read more

தமிழ்த்தலைவா… காப்பியமுரைத்துக் குறளோவியந்தீட்டிப் புனைவுகளாக்கி மொழித்தேனில் முக்கியெடுத்த கனிச்சுவைக் கரும்பைக் கணுவின்றிக் கவிச்சுவையில் நனைத்து அமிழ்து படைத்து ஆரியம் வென்ற அன்புத்தலைவா… எழுபிறவியை ஒரு பிறவியில் வாழ்ந்து மீள்பிறவியெடுத்தே மீண்டு வந்தாயும் போயப் பிழைதரும் பித்தர்களின் சொற்களைப் பொய்யாக்கிப் பொய்யாக்கியே எழுந்து நின்றாய்… மலர்ந்திருக்கும் மலரைத் தீண்டிப் பார்க்கும் மதிமயக்கும் மாலைத் தென்றலைப் போல் மனதிருக்குமுன் ஆற்றல் முன் மரணமும் தொட்டுச் சென்று தொட்டுச் சென்று வெட்கியதே… நாணியதே… ஈற்றிலுன்னை அரவணைத்தே இறப்புமின்று இறவாப் புகழ் பெற்றதே… […]

Read more

ASK Jhansi Home Care Products

);