verado-lite

காவேரிக் கரையோரம்…

ஆச்சு... நமக்குன்னு ரெண்டு குழந்தைகள் ஆயாச்சு... ஏதோ வாழ்ந்தோம் முடித்தோமென்ற நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் வாழ்ந்து முடித்து விடுகிறார்கள்...

காவேரிக் கரையோரம்…

ஆச்சு… நமக்குன்னு ரெண்டு குழந்தைகள் ஆயாச்சு… ஏதோ வாழ்ந்தோம் முடித்தோமென்ற நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் வாழ்ந்து முடித்து விடுகிறார்கள்… எழுத்தார்வம், ரசனைகள், கலைத்திறன், தொழில் ஆசைகள் அத்தனையும் மனதுக்குள் புதைக்கப்படுகிறது. அப்படியே வெளிப்பட்டாலும் அது காசு என்னும் பிரதான நோக்கத்தில் தான் வெளிப்படுகிறது…

நமக்கென ஒரு ஆத்மதிருப்திக்காக இவற்றை செய்கிறோமா… அப்படி செய்ய சொல்லும் போது, “நேரமே இல்லைங்க…” என்ற பதில் தானே வருகிறது… ரசனைமிக்க பெண்கள் கூட டிவி சினிமாவில் காதலைப் பார்த்து அதிலேயே ஏதோவொரு திருப்தி கண்டு நிஜவாழ்வில் ஜடங்களாக வாழப் பழகிவிட்டிருக்கிறார்கள்…

நான் கடந்த ஞாயிறு வெள்ளப் பெருக்குடன் சுழித்தோடும் காவேரியைக் காண மச்சானுடன் (கணவர்) சென்றிருந்தேன்… மேட்டாங்கரையில் ஏறும் போது தடுமாறி விழுந்துவிடாமல் இருக்க அவர் கைகளைப் பற்றிக் கொண்டேன்… கீழே விழாமல் இருக்க மட்டுமல்ல… நாற்பது, ஐம்பதுகளிலும் அந்த கதகதப்பு மிகவும் இதமானது…

எதிர்பார்த்ததற்கும் மேலேயே மக்கள் கூட்டம். நானும் உற்று கவனித்தேன். எந்த ஒரு நாற்பதுகளில் இருக்கும் ஜோடியும் கைகோர்த்து நடக்கவில்லை. ஏன் நெருங்கிக் கூட நடக்கவில்லை. ஏதோவொரு இடைவெளி பிரிக்கிறது இங்கே. சமூகத்தின் கண்களில் அது கண்ணியம் தவறிய செயலாக பார்க்கப்படுகிறதா… இல்லை அது இத்தனை வயதில் அவசியமில்லை என்கிற எண்ணமா… இன்னும் இறுக்கமாக நான் பற்றிக் கொண்டேன்…

அந்த கைச்சூடு உடலெங்கும் பரவி மனதோடு ஐக்கியமாகி இவன் தான் உன் வாழ்க்கை என்ற அர்ப்பணிப்பை ஊட்டுகிறது… இவனுக்காக நீ என்ன வேணா செய்யலாம், எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம் என்ற ஆத்மார்த்தத்தைத் தருகிறது… வெறும் உள்ளங்கை ஸ்பரிசத்தில் உள்ளப்பூர்வமான நெருக்கத்தை உணரும் போது நமது ரசனைகள் வெளிவருகின்றன. கவிதை தோன்றுகிறது…

மனதுக்கு பிடித்த ஒரு பாடலைக் கேட்கும் போது மீண்டும் மீண்டும் நம்மையறியாமல் முனுமுனுப்பதைப் போலத் தான்… மனதுக்கு பிடித்த ஒரு செயலும்… கணவனின் கைச்சூடோ, பிள்ளை தரும் முத்தமோ, பெற்றோருக்கு செய்த உபகாரமோ நாள் முழுக்க மனம் அதை ரீவைண்ட் செய்து செய்து பலமுறை ஓடவிட்டு ரசிக்கிறது…

விட்டுக்கொடுத்தல், மனம்நிறை பிரியங்கள், அன்னியோன்னியம், மனதில் ஊறிக்கொண்டேயிருக்கும் அன்பு என யாருக்கு அந்தரங்க வாழ்க்கை இனிமையாக அமைகிறதோ அவர்களால் மட்டுமே வெளியுலகில் சாதிக்க முடியும்… இதுதான்ங்க நம் வாழ்க்கையை நிறைவாக்கும் சூட்சுமம்…

related posts

தமிழ்த்தலைவா… காப்பியமுரைத்துக் குறளோவியந்தீட்டிப் புனைவுகளாக்கி மொழித்தேனில் முக்கியெடுத்த கனிச்சுவைக் கரும்பைக் கணுவின்றிக் கவிச்சுவையில் நனைத்து அமிழ்து படைத்து ஆரியம் வென்ற அன்புத்தலைவா… எழுபிறவியை ஒரு பிறவியில் வாழ்ந்து மீள்பிறவியெடுத்தே மீண்டு வந்தாயும் போயப் பிழைதரும் பித்தர்களின் சொற்களைப் பொய்யாக்கிப் பொய்யாக்கியே எழுந்து நின்றாய்… மலர்ந்திருக்கும் மலரைத் தீண்டிப் பார்க்கும் மதிமயக்கும் மாலைத் தென்றலைப் போல் மனதிருக்குமுன் ஆற்றல் முன் மரணமும் தொட்டுச் சென்று தொட்டுச் சென்று வெட்கியதே… நாணியதே… ஈற்றிலுன்னை அரவணைத்தே இறப்புமின்று இறவாப் புகழ் பெற்றதே… […]

Read more

மகன் ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு நானும் மச்சானும் (ஹஸ்) போயிருந்தோம்… பையன் க்ளாஸ்ல செகண்ட் ரேன்க்… போனதுமே அஞ்சு டீச்சர்ஸ் வரிசையா உட்கார்ந்திருந்தாங்க…, முதல்ல மேத்ஸ் மிஸ்… “மேத்ஸ்ல பையன் 96/100 வாங்கி இருக்கான். அடுத்த முறை செண்டம் வாங்கனும். 100க்கு ஒரு மார்க் கூட கம்மியா வாங்கிட கூடாதுன்னு சொல்லி இருக்கேன்…” என்றார்… மிச்சம் 4 மார்க்கை கேர்லெஸ் மிஸ்டேக்ல விட்டுட்டு வந்து மகன் புலம்பியது ஞாபகம் இருந்துச்சு எனக்கு… ஏன் செண்டமே தான் வாங்கணுமா… […]

Read more

ASK Jhansi Home Care Products

);